தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து

தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

News image

என்.ரங்கசாமி

Updated On :7 ஜூன் 2021, 9:45 am

DIN

தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. 

மேலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறை குறித்தும் விரைவில் வெளியிடவுள்ளது. 

இந்நிலையில், தமிழக பாடத்திட்டங்களே புதுச்சேரியிலும் பின்பற்றப்படுவதால் தமிழகத்தைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். 

மேலும், தமிழகத்தைப் பின்பற்றி புதுச்சேரியிலும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வெளியிட்டுள்ள தகவல்: 

புதுச்சேரியில் 12,353 மற்றும் காரைக்காலில் 2,321 மாணவர்கள் 2020-21 ஆம் கல்வி ஆண்டில், தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் பிளஸ் 2 படித்து வந்தனர். இவர்கள் நிகழாண்டு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வு எழுத உள்ளனர்.

இந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தமிழக பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிளஸ் 2 படித்து வரும் மாணவர்களுக்கும், பொதுத்தேர்வு நடைபெறாது என அறிவிக்கப்படுகிறது. இதன்படி புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு எழுத இருந்த 14,674 மாணவர்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.