அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ஆளுநரை இன்று மாலை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சென்னை ராஜ்பவனில் சந்திக்கவுள்ளார். 

News image
பன்வாரிலால் புரோஹித் - மு.க.ஸ்டாலின்
Updated On :9 ஜூன் 2021, 5:10 am

DIN

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை சந்திக்கவுள்ளார். 

சட்டப்பேரவைக் கூட்டத்தில் உரையாற்ற முறைப்படி அழைப்பு  விடுப்பதற்காக  ஆளுநரை புரோஹித்தை முதல்வர் சந்திப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் உரையுடன் இம்மாத இறுதியில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இதில் ஆளுநர் உரையாற்ற முறைப்படி அவரை சந்தித்து அழைப்பு விடுக்கப்படுகிறது.

மேலும், இந்த சந்திப்பில் கரோனா பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்வருடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு, மருத்துவத் துறை செயலர் உள்ளிட்டோரும் ஆளுநரைச் சந்திக்கவுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.