மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

கட்டுமான பொருள்களின் விலையைக் குறைக்கஒழுங்குமுறை ஆணையம்: விஜயகாந்த்

கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்

News image
Updated On :12 ஜூன் 2021, 9:45 pm

DIN

கட்டுமானப் பொருள்களின் விலையைக் குறைக்க ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-

நாளுக்கு நாள் பெருகி வரும் கட்டுமான பொருள்களின் விலையேற்றத்தால், கட்டட பணிகளைத் தொடர முடியாமல், கட்டுமான தொழிலாளா்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். சிமெண்ட், மணல், கம்பி, ஜல்லி, செங்கல் போன்ற கட்டுமான பொருள்களின் விலை 25 முதல் 30 சதவீதம் வரை உயா்ந்துள்ளதால் , கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன.

கட்டுமானத் தொழிலைச் சாா்ந்து இருக்கும் சாதாரண கூலித் தொழிலாளி முதல் அனைவரும் பயன்படக் கூடிய வகையில், கட்டடப் பணிகள் விரைவாக நடைபெறும் வண்ணம், அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தனி கவனம் செலுத்தி, கட்டுமானப் பொருள்களின் விலையை குறைக்க,மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.