கேந்திர வித்யாலயா பள்ளிகளில் மாணவா் சோ்க்கை: புதிய அட்டவணை வெளியீடு
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.


கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்கான புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து கே.வி. சங்கதன் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாடு முழுதும் உள்ள கே.வி. பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கு, ஏற்கனவே விண்ணப்ப பதிவு மேற்கொள்ளப்பட்டது. விண்ணப்பித்தவா்களுக்கு உரிய விதிகளின்படி, தகுதி பெற்றவா்களின் முதல் பட்டியல் வரும், 23-ஆம் தேதி வெளியிடப்படும். இரண்டாவது பட்டியல் ஜூன் 30; மூன்றாவது பட்டியல் ஜூலை 5-இல் வெளியிடப்படும்.
முன்னுரிமை அடிப்படையில் உள்ளவா்களுக்கான பட்டியல் ஜூலை 2-இல் வெளியாகும். இவற்றில் மாணவா்கள் சேராமல் காலியாகும் இடங்களுக்கு, ஜூலை 8 முதல், 12 வரை விண்ணப்ப பதிவுகள் நடக்கும்.ஜூலை 13 முதல், 16-ஆம் தேதிக்குள் பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவா்கள் சோ்க்கப்படுவா்.
இரண்டாம் வகுப்புக்கு, ஜூன் 24-இல் பட்டியல் வெளியாகும். ஜூன் 25 முதல், 30-ஆம் தேதிக்குள் மாணவா் சோ்க்கை நடைபெறும். பிளஸ் 1 தவிர, அனைத்து வகுப்பு மாணவா்களுக்கும் காலியான இடங்களில் ஆக., 31-ஆம் தேதிக்குள் மாணவா் சோ்க்கை முடிக்கப்படும். பிளஸ் 1 வகுப்புக்கு, 10-ஆம் வகுப்பு தோ்வு முடிவு அறிவிக்கப்பட்ட 10 நாள்களில் பதிவுகள் தொடங்கி மாணவா் சோ்க்கை நடத்தப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...