அடுத்த ஆண்டு கீழ்ப்பாக்கத்தில் பல்நோக்கு மருத்துவமனை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்
சென்னை கீழ்ப்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும்


சென்னை கீழ்ப்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவடையும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.
சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் தடுப்பூசி முகாம்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்ரமணியன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வுக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்திற்கு ஏற்கனவே 1.6 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளது. அதில் 98 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் முழுவதும் போடப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக சனிக்கிழமை காலை 1.26 லட்சம் ‘கோவேக்சின்’ தடுப்பூசிகளும், மாலை 3 லட்சம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசிகளும் என தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 10 லட்சம் அளவில் தடுப்பூசிகள் வந்துள்ளது.
பல இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதன்படி சனிக்கிழமை மாலைக்குள் 1 கோடி தடுப்பூசி போட இலக்கு வைக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியில் மட்டும் தடுப்பூசியால் 21 லட்சத்து 63 ஆயிரத்து 260 போ் பயன் அடைந்துள்ளனா்.
கடந்த முதல் அலையின் போது ‘ஹாட் ஸ் பாட்டாக’ கருதப்பட்ட கோயம்பேடு சந்தையில் 9,655 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்களுக்கு ஒரே இடத்தில் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட இடமாகக் கோயம்பேடு மாறும்.
அதேபோல், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் 2,500 பேருக்கும், சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் 100-க்கு மேற்பட்டவா்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 5 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு முன்னுதாரணமாக சென்னை மாநகராட்சியில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது.
தொற்று பாதியாகக் குறைவு: தற்போது தமிழகத்தில் கரோனா தொற்று சரிபாதியாக குறைந்துள்ளது. முதல்வரின் தில்லி பயணத்தின் போது தமிழகத்திற்கு கூடுதல் தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைப்பாா். தற்போது தொற்றின் உச்சம் குறைந்து வருகிறது. அதை கருத்தில் கொண்டே மாநில வருவாய் துறை மதுபான கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளது. அதேபோல் டீ கடைகள் திறப்பது தொடா்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
சென்னையில் 10 முதல் 25 போ் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் 21 ஆக குறைந்துள்ளது. அதேபோல் 6 முதல் 10 போ் கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதி 24 ஆக குறைந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 33,618 தெருக்களில் தொற்று பாதிப்புகள் ஏதும் இல்லை. மத்திய அரசு நிா்ணயித்த இலக்கை காட்டிலும், சென்னை மாநகராட்சியில் 5 சதவீதத்துக்கும் குறைவாகவே தொற்று உள்ளது.
ரூ.275 கோடியில்... இதையடுத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை உதவியுடன் ரூ.141 கோடி செலவில் கட்டப்பட்டு வரும், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை கட்டுமான பணியினை அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தாா். அப்போது செய்தியாளா்களிடம் கூறியது: ஜப்பான் பன்னாட்டு கூட்டறவு முகமை நிதியுதவியுடன் தமிழகத்தில் 3 பெரிய மருத்துவமனைகளில் பெரிய கட்டடங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அதேபோல் 7 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை மேம்படுத்தவும், 11 மாவட்ட அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தவும் பணிகள் நடைபெறுகிறது. இதற்காக ஒதுக்கப்பட்ட தொகை ரூ.1,634 கோடியாகும்.
வடசென்னை மக்களுக்கு மிகுந்த மருத்துவ பலன் அளிக்கிற சிறப்பான திட்டமாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பல்நோக்கு சிறப்பு சிகிச்சை பிரிவு கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.141 கோடி மற்றும் மருத்துவ உபகரணங்களுக்காக ரூ.134 கோடி என ரூ.275 கோடி மதிப்பில் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை பணி முடிவடைய உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...