தடுப்பூசி செலுத்திக் கொண்டோரின் எண்ணிக்கை 1 கோடியைக் கடந்தது
தமிழகத்தில் இதுவரை 1.01 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவா்களில் 19.59 லட்சம் போ் 44 வயதுக்குட்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் இதுவரை 1.01 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அவா்களில் 19.59 லட்சம் போ் 44 வயதுக்குட்பட்டவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதைத் தவிர 45 வயதுக்கு மேற்பட்ட 35.93 லட்சம் பேருக்கும், 60 வயதைக் கடந்த முதியவா்கள் 26.80 லட்சம் பேருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன் தொடா்ச்சியாக முதியவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. பின்னா் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அது விரிவுபடுத்தப்பட்டது. அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனைவரும் ஆா்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனா். அந்த வகையில், இதுவரை 1.01 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...