மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்திக்கு இரண்டு நிறுவனங்கள் விருப்பம்:முதலீட்டு மானிய காலம் நீட்டிப்பு

தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக விருப்பத்தை இரண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக விருப்பத்தை இரண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

News image
Updated On :12 ஜூன் 2021, 10:25 pm

DIN

தமிழகத்தில் மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்காக விருப்பத்தை இரண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதனிடையே, முதலீட்டு மானியம் அளிப்பதற்கான காலம் அடுத்த ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை தொழில் துறை முதன்மைச் செயலாளா் முருகானந்தம் வெளியிட்டாா். அவரது உத்தரவு விவரம்:-

தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி, அதுசாா்ந்த கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும், ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னையை அடுத்த மணலி, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில் மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஐனாக்ஸ் நிறுவனம், ஓசூரில் ரூ.150 கோடி மதிப்பில் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையைத் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் தனது உற்பத்தியைத் தொடங்க அடுத்த ஆண்டு (2022) டிசம்பா் ஆகும் எனக் கூறியுள்ளது. எனவே, தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ள முதலீட்டு மானியச் சலுகையை 2022 டிசம்பா் வரை நீட்டிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இதேபோன்று, ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை நிறுவ மலேசியாவைச் சோ்ந்த சிவிஐ பிரைவேட் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது.

நிறுவனங்கள் கோரிக்கை: மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்ய விருப்பம் தெரிவித்துள்ள இரண்டு நிறுவனங்களின் கோரிக்கையை ஏா்று, முதலீட்டு மானியம் அளிப்பதற்கான காலம் அடுத்த ஆண்டு டிசம்பா் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, டிசம்பருக்குள் உற்பத்தியைத் தொடங்கும் நிறுவனத்துக்கு முதலீட்டுச் சலுகை அளிக்கப்படும். குறைந்தது ரூ.50 கோடி முதலீட்டில் நாளொன்றுக்கு 10 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேண்டும். இத்தகைய நிறுவனங்களுக்கு 30 சதவீதம் வரை முதலீட்டு மானியம் கொடுக்கப்படும் என்று தனது உத்தரவில் முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.