மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அருப்புக்கோட்டையில் கரோனா நிதி, மளிகைப் பொருள்கள் வழங்கல்: அமைச்சர் தொடக்கி வைப்பு

அருப்புக்கோட்டையில் கரோனா 2ம் கட்ட நிவாரண நிதி ரூ. 2,000 மற்றும் 14 வகையான பலசரக்குப் பொருள்கள் தொகுப்பை வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தொடக்கிவைத்தார்.

News image

அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியில் 2ம் தவணை கரோனா நிவாரண நிதி ரூ. 2,000, 14 வகை பொருள்கள் தொகுப்பையும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்.

Updated On :15 ஜூன் 2021, 12:32 pm

DIN

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கரோனா 2ம் கட்ட நிவாரண நிதி ரூ. 2,000-ம் மற்றும் 14 வகையான பலசரக்குப் பொருள்கள் தொகுப்பையும் குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியை செவ்வாய்க்கிழமை வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தலைமை வகித்துத் தொடக்கிவைத்தார்.

அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதி நியாயவிலைக் கடையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வருவாய்த்துறை அமைச்சர் இராமச்சந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் சட்டப்பேரவைத்தலைவர் கே.எம்.விஜயக்குமார், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் சுப்பாராஜ், முன்னாள் நகர்மன்றத் தலைவர் சிவப்பிரகாசம், திமுக நகரச்செயலாளர் ஏ.கே.மணி, முத்துவேல் உள்ளிட்டோர் முன்னிலை  வகித்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்த திட்டப்படி கொரோனா நிவாரண நிதி ரூ. 2,000ஐயும், 14 வகை பலசரக்குப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் அமைச்சர் இராமச்சந்திரன் பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார்.

அதேபோல அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாலவநத்தம், அருப்புக்கோட்டை நகருக்குள்பட்ட அஜீஸ் வீதி, வடம்போக்கித்தெரு மற்றும் பந்தல்குடி ஆகிய இடங்களிலும் இதேபோன்ற நிவாரணப்பொருள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் அடுத்தடுத்துத் தொடக்கி வைத்தார். உடன் இந்நிகழ்ச்சிகளில் வருவாய்த்துறை அலுவலர்கள், வட்ட வழங்கல்துறை அதிகாரிகள், அலுவலர்கள் நேரில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.