தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வாடிக்கையாளர் சேவை எண்களை கூகுளில் தேட வேண்டாம்: எச்சரிக்கும் காவல்துறை

எந்த ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணையும் கூகுளில் தேட வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image

வாடிக்கையாளர் சேவை எண்களை கூகுளில் தேட வேண்டாம்: எச்சரிக்கும் காவல்துறை

Updated On :18 ஜூன் 2021, 10:22 am

எந்த ஒரு நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை எண்ணையும் கூகுளில் தேட வேண்டாம் என்று காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூகுளில் இவ்வாறு வாடிக்கையாளர் சேவை எண்களைத் தேடும் போது, பெரும்பாலான தேடல் முடிவுகள் விளம்பரதாரர்களின் இணையப் பக்கங்களாகவே வருகின்றன. இதன் மூலம் பல மோசடிகள் நடைபெறுவதாகவும், சமீப காலமாக இது தொடர்பான மோசடிப் புகார்கள் அதிகளவில் காவல்துறையில் பதிவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது, சில மோசடியாளர்கள் போலியான விளம்பரங்கள் மூலம், கூகுளில் மக்கள் இதுபோன்று வாடிக்கையாளர் சேவை எண்களைத் தேடும் போது தங்களது இணையப் பக்கங்கள் முதலில் வருவது போல செய்து விடுகிறார்கள். எனவே, முதலில் வரும் இந்த இணையப் பக்கத்துக்குள் நுழைந்து, தங்களுக்குத் தேவைப்படும் நிறுவனத்தின் சேவையைப் பெற முனையும் மக்கள், இந்த மோசடியாளர்களின் எண்களைத் தொடர்பு கொள்வது மோசடிக்கு வித்திடுகிறது.

இதுபோன்ற மோசடியாளர்கள் பெரும்பாலும் பஞ்சாப், ஹரியாணா, உத்தரப்பிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள், தங்களை தொடர்பு கொள்ளும் அப்பாவி மக்களிடம் கிரெடிட் அல்லது டெபிட் அட்டையின் விவரங்களைப் பெற்று பணமோசடி செய்கிறார்கள்.

Story image

சில மோசடியாளர்கள், தங்களிடம் சிக்கும் நபர்களின் செல்லிடப்பேசியில் தானியங்கி செயலிகளைக் கூட பதிவேற்றி, அதனைக் கொண்டு வங்கி மோசடியை அரங்கேற்றுகிறார்கள்.

எனவே, எந்த விதமான தகவல் குறித்தும் கூகுளில் தேடும் போது, அதில் வரும் இணையப் பக்கங்களின் முன்பாக ஆங்கிலத்தில் ஏடி போன்ற எழுத்துக்கள் இருந்தால் அவற்றை தவிர்த்து விடலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.