காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மேக்கேதாட்டு அணை: தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். 
Updated On :20 ஜூன் 2021, 9:56 am

DIN

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கட்ட எதிர்ப்பு தெரிவித்து, தமிழக காவிரி விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து கடைமடைப் பகுதியான நாகப்பட்டினம், கருங்கண்ணியிலுள்ள காவிரி கொண்டான் ஆற்றின் தடுப்பணையில் இறங்கி தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக முதல்வர், பாரதப் பிரதமரை அணை கட்டுவது தொடர்பாக சந்தித்த பிறகு கர்நாடக முதல்வர் எடியூரப்பா காவேரி குறுக்கே அணையை கட்டியே தீருவேன் என அறிவித்திருப்பது டெல்டா விவசாயிகள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனைக் கண்டித்து கடைமடைப் பகுதியான நாகப்பட்டினம் மாவட்டம், கருங்கண்ணியிலுள்ள காவிரி கொண்டான் தடுப்பணையில் இறங்கி 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் அமைப்புச் செயலாளர் எஸ்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். அப்போது கர்நாடக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய விவசாயிகள் டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக மாற்ற முயற்சிக்கும் கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் கோரிக்கை விடுத்ததோடு, அதையும் மீறி அணை கட்டினால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என தெரிவித்தனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள், பங்கேற்று தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.