எங்களை துரத்துவதை நிறுத்துங்கள்! மோடியை விமர்சித்த சிறுமியின் தாய் ஆத்திரம்பைக்-டாக்ஸி ஓட்டினால் அபராதம்: நீதிமன்றத்தில் தமிழக அரசுசென்னையின் அண்டை மாவட்டங்களை சுற்றிவளைத்த மழை!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ. 95.31 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட இந்திய பங்குச் சந்தை!பிகார் இடைத்தேர்தலில் எனது வெற்றி, பாஜக தலைமைக்கான செய்தி: பிரசாந்த் கிஷோர்சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

வாழ்வை மாற்றிய 15 வினாடி சிரிப்பு! பல மீம்களில் டீ கப்புடன் சிரிக்கும் அந்த சிறுவன்!

பல மீம்களின் நிறைவில் டீ கப்புடன் சிரிக்கும் அந்த சிறுவனைப் பற்றிய தகவல்..

News image
Updated On :5 மார்ச் 2026, 2:55 pm IST

15 வினாடி சிரிப்பு ஒருவரது வாழ்க்கையையே மாற்றும் என்று சொன்னால் நம்ப முடியாது, ஆனால், இந்த டிஜிட்டல் உலகில் எதுவும் நடக்கலாம்.

அப்படித்தான், தன்னுடைய முதலாளி சொன்ன ஒரு நகைச்சுவையை, கேட்டுக் கொண்டிருந்த அருண் குமார் என்ற 15 வயது சிறுவன், தன்னை மறந்து சிரித்த 15 வினாடி சிரிப்பு அவனது வாழ்க்கையையே புரட்டிப்போட்டிருக்கிறது நல்ல முறையில். இவர் ஆந்திரத்தைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 18 வயதாகும் அருண் குமாரின் அந்த சிரிப்பை நாமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைகள் பார்த்து சிரித்திருப்போம். அதாவது ஒவ்வொரு நகைச்சுவை மீம்களின் இறுதியிலும், அருண் குமாரின் சிரிப்பு விடியோதான் நிறைவாக இருக்கும்.

ஒரு சில வினாடி சிரிப்பினால், எதையும் மாற்ற முடியும் என்று நிரூபித்திருக்கிறது அருண் குமாரின் வாழ்க்கை. இன்று அருண் குமாரைத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அவர் யார்? எங்கிருக்கிறார், என்ன பெயர் என்று வேண்டுமானால் பலருக்கும் தெரிந்திருக்காது. ஆனால், அவரது அந்த சிரிப்பு.. தெரியாதவர்கள் இருக்க முடியாது.

அருண் குமார் தன்னுடைய 10வது வயதில், குடும்ப வறுமை காரணமாக நான்காம் வகுப்பிலேயே பள்ளியை பாதியில் நிறுத்திவிட்டு வேலைத் தேடிக் கொண்டிருந்த போது, லாரி ஓட்டுநர் நேரு என்பவர், அருண் குமாரை தன்னுடைய உதவியாளராக வேலைக்கு அமர்த்திக் கொண்டார்.

ஒருநாள், மாலை வேளையில், தேநீர் இடைவேளையின்போது, நேரு சொன்ன ஒரு நகைச்சுவையைக் கேட்டுக் கொண்டிருந்த அருண் குமார் மனம் விட்டு சிரித்ததை நேரு விடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட, அது யாரும் எதிர்பாராத வகையில் வைரலானது. ஒரு விடியோ வைரலாகும். அதனை பலரும் பார்ப்பார்கள். ஒரு கோடி பார்வையாளர்கள் என்று சொல்வார்கள் அவ்வளவுதான். ஆனால், அருண் குமார் சிரிப்போ வேறு வகையில் சாதனை படைத்தது. பலரும் அந்த சிரிப்பை தங்களது மீம்ஸ்களின் இறுதியில் சேர்க்க ஆரம்பித்தனர். அது முடிவு பெறாமல் இன்றுவரை தொடர்கதையாக உள்ளது.

அப்போதுதான் அருண் பற்றிய தகவல்கள் இணையத்தில் வெளியாகத் தொடங்கியது. அருணை பணிக்கு அமர்த்திய நேருவும், குடும்ப வறுமையால் கல்லூரிப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு லாரி ஓட்டும் வேலைக்கு வந்தவர். தன்னைப் போல அருண் ஆகிவிடக் கூடாது என்பதற்காக அவனுக்கு புத்தகம் வாங்கிக் கொடுத்து படிக்க வைத்து 10ஆம் வகுப்புத் தேர்வெழுத வைத்தார்.

லாரி ஓட்டுநர் அறையே ஒரு சிறிய வகுப்பறையாக மாறியது. அருணுக்கு பாடங்களை சொல்லிக் கொடுத்தார். கடைசியாக அருண் பத்தாவது பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று, படிப்பை பாதியில் விட்ட அருண் என்ற அடையாளத்தை மாற்றி 10வது படித்த அருண் என மாறியிருக்கிறது.

ஒரு அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும் கதவைத் தட்டலாம், அதனைத் திறந்து சாதனை படைக்க அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்பதைத்தான் இந்த வாழ்க்கைப் பாடம் கற்றுத் தருவதாக பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள்.

Summary

Information about the boy who smiles with a cup of tea at the end of many memes..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.