காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

மேக்கேதாட்டு அணை கட்டும் முயற்சியை கைவிடக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை கைவிடக் கோரி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரபள்ளி கிராமத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரபள்ளி கிராமத்தில் விவசாயிகள் வயலில் இறங்கி மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated On :21 ஜூன் 2021, 8:20 am

DIN

சீர்காழி: கர்நாடக மாநிலம் மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை கைவிடக் கோரி மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரபள்ளி கிராமத்தில் தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் விஸ்வநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

விவசாயிகள் வயலில் இறங்கி கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேக்கேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என்று கண்டன குரல் எழுப்பி கோஷம் போட்டனர். விவசாயிகள் வைத்திலிங்கம், மூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் பனங்குடி கிராமத்தில் காவிரி விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமையிலும , புளியந்துறை கிராமத்தில் வெங்கடேசன் தலைமையிலும், மாதானம் கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தலைமையிலும், ஆரபள்ளம் கிராமத்தில் விவசாய சங்க பொருளாளர் பாஸ்கரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் விவசாயிகள் கையில் கருப்புக்கொடி ஏந்தி மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சிக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.