கமுதி: முதுகுளத்தூரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளியான பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் முதுகுளத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்து 1500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளியின் அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றும் ஹபீப் என்பவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
பள்ளியில் படிக்கும் மாணவியின் செல்போன் எண்ணை வாங்கிக்கொண்டு அவரது வீட்டில் பெற்றோர் இல்லாத சமயத்தில் பேசி புத்தகத்தை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு வருமாறு தெரிவிப்பதோடு அப்படி வர மறுத்தால் உனக்கு மார்க் குறைவாக போட்டு தேர்ச்சி அடையவிடாமல் செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்து பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுபோல பல மாணவிகளை தனது வீட்டிற்கு புத்தகத்துடன் வந்ததாகவும் அதுபோல் நீயும் வரவேண்டுமென்று ஒரு மாணவியுடன் பேசும் ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
பள்ளி ஆசிரியர் ஒருவரால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், ஏடிஎஸ்பி லயோலா இக்னோசியஸ், முதுகுளத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரா ரவி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் ஆசிரியர் ஹபீப் போக்ஸோ சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு முதுகுளத்தூர் போலீசார் ரகசிய இடத்தில் வைத்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர் .
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

2 வீராங்கனைகள் அரைசதம்..! ஆஸி.க்கு 252 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!
வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள்! - ஞானேஷ்குமார் தகவல்

வலுவான நிலையில் நியூசிலாந்து; அரையிறுதிக்கு முன்னேற பாகிஸ்தான் செய்ய வேண்டியதென்ன?

தங்கம் விலை குறைந்தது: வெள்ளி விலை?
வீடியோக்கள்
"இனி EPSக்கு எந்த காலத்திலும் வெற்றி இல்லை!" ஓ.பன்னீர் செல்வம் பேட்டி | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

வார ராசிபலன்! | March 1 முதல் 7 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

First Exclusive | திமுகவில் இணைந்த OPS: விவரிக்கும் உசிலம்பட்டி MLA Iyyappan | Dinamani | DMK
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

