தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image

தமிழகத்தில் 4 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு

Updated On :24 ஜூன் 2021, 8:33 am

DIN

தமிழகத்தில் அடுத்த 4 நாள்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,

வெப்பசலனம் காரணமாக இன்று சேலம், தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழையும், கடலோர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், ஜூன் 26ஆம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களிலும், ஜூன் 25ஆம் தேதி உள்மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யக்கூடும்.

ஜூன் 27ஆம் தேதி வட மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.