அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு முறை: முதல்வர் ஆலோசனை

தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:29 am

DIN

தமிழகத்தில் பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

கரோனா இரண்டாம் அலையால் தேர்வு நடத்த முடியாத சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்களில் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்ட்டுள்ளது. மாநில பாடத்திட்ட பிளஸ் 2 மாணவர்களுக்கு 10 நாட்களில் மதிப்பெண் கணக்கீட்டு முறையை இறுதி செய்து தேர்வு முடிவுகளை வெளியிட மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்நிலையில் தமிழகத்திலும் பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மதிப்பெண் கணக்கீட்டு முறை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

இதையடுத்து. தமிழக மாணவர்களுக்கு பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் முறை குறித்து முதல்வர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

முன்னதாக, பிளஸ் 2 மதிப்பெண் கணக்கீட்டுக்காக அவர்களின் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிபெண்களை இணையத்தில் பதிவேற்ற அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.