அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

திண்டுக்கல்: கோயில்களைத் திறக்கக்கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் கோயில்களைத் திறக்கக்கோரி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :28 ஜனவரி 2024, 3:29 am

DIN

தமிழகத்தில் கோயில்களைத் திறக்கக்கோரி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழகத்தில் கரோனா தோற்று அதிகரித்ததைத் தொடர்ந்து பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி அமைப்பின் மதுரை கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ் தலைமை வகித்தார்.

கோயில் வாசலில் தண்ணீர் தெளித்து, சந்தனம் குங்குமம் வைத்து சூடம் ஏற்றி வழிபாடு நடத்திய இந்து முன்னணியினர் வெண் சங்கு ஊதி கோயில்களை திறக்க வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் சஞ்சீவி, மூர்த்தி, செந்தில்வேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.