கரோனா பெருந்தொற்றிலிருந்து கட்டுமானத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடும் சீரிய நோக்கத்தோடு, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 13,41,494 தொழிலாளர்களுக்குக் கரோனா தடுப்பூசி செலுத்திட வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கிணங்க, முதற்கட்டமாக 2 இலட்சம் கட்டுமானத் தொழிலாளர்களுக்குச் சிறப்பு முகாம் மூலமாகக் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினையும், கரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பணிவாய்ப்பை இழந்த, குடும்ப அட்டை இல்லாத, புலம்பெயர்ந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் பசியால் வாடக்கூடாது என்ற உயரிய எண்ணத்தோடு, 1,29,444 தொழிலாளர்களுக்கு 6 கோடியே 66 இலட்சத்து 44 ஆயிரத்து 243 ரூபாய் மதிப்பீட்டில், 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம் பருப்பு, 1 கிலோ சமையல் எண்ணெய் ஆகிய உணவுப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கும் திட்டத்தையும் இன்று (25.06.2021) நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.