ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருப்பூரில் விவசாயிகள் தர்னா

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி திருப்பூரில் விவசாயிகள் சனிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

News image
வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருப்பூரில் விவசாயிகள் தர்னா
Updated On :26 ஜூன் 2021, 10:46 am

DIN

திருப்பூர்: மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி திருப்பூரில் விவசாயிகள் சனிக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு ஆளுநர் மாளிகை முன்பாகவும், நாட்டின் இதர பகுதிகளிலும் சனிக்கிழமை (ஜூன் 26) தர்ணா போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த தர்னாவுக்கு அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.குமார் தலைமை வகித்தார்.  

இதில், பங்கேற்ற விவசாயிகள் கூறியதாவது: தில்லியில் 200 நாள்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு விரோதமான 4 சட்டத் தொகுப்புக்களையும், மின்சார சட்ட திருத்த மசோதாவையும் உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும். கருத்துரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளைப் பறிக்கக்கூடாது என்றனர்.  

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக சனிக்கிழமை தர்னாவில் ஈடுபட்ட விவசாயிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.