அதிமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் இழப்பு என்பது தவறான தகவல்: பி. தங்கமணி

அதிமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் இழப்பு என தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக முன்னாள் மின்துறை அமைச்சர் பி. தங்மணி தெரிவித்துள்ளார். 
அதிமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் இழப்பு என்பது தவறான தகவல்: பி. தங்கமணி

அதிமுக ஆட்சியில் மின்சார கொள்முதலில் இழப்பு என தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக முன்னாள் மின்துறை அமைச்சர் பி. தங்மணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழ் நாடு மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து, 2019-ஆம் ஆண்டுக்கான மத்திய தணிக்கைக் குழுவில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை மிகைப்படுத்தி, தவறான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
மத்திய தணிக்கைத் துறை சமர்ப்பித்துள்ள அறிக்கையில், தமிழ் நாட்டில் உள்ள சட்டமுறைக் கழகம் உட்பட 75 பொதுத் துறை நிறுவனங்களில் மொத்தமாக
20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மின்சார வாரியத்திற்கு 13 ஆயிரத்து 176 கோடியே 20 லட்சம் ரூபாய்
இழப்பீடு என்று சொல்வது, தணிக்கைத் துறையே மின்சார இழப்புக்கு, மின்சாரக் கொள்முதல் உற்பத்தி செலவு, பணியாளர் மற்றும் நிதி செலவினங்களே காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கேயும் தவறு நடைபெற்றதாகச் சொல்லவில்லை.
பொதுத் துறை நிறுவனங்களில் மின்சார வாரியமும், போக்குவரத்துத் துறையும் சேவைத் துறைகளாகும். பொதுமக்களுக்கு ஒரு யூனிட் மின்சாரம் எவ்வளவு ரூபாய்க்கு வழங்கப்படுகிறது என்பது தான் முக்கியமே தவிர, மின்சார வாரியத்திற்கு வருமானத்தைக் கூட்டுவது என்பது நோக்கமல்ல. தமிழகத்தில் மட்டும் தான் அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் மின்சாரமும்; அதே போல், அனைத்து விவசாயிகளுக்கும் 24 நேரம் மும்முனை மின்சாரமும் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. 
மின்சார வாரியத்தின் பணியாளர்களுக்கு உரிய ஊதியத்தை வழங்காமலோ, அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை கொள்முதல் செய்யாமலோ, தமிழகத்தின் மொத்த மின் தேவையை பூர்த்தி செய்யத் தேவையான அளவு மின்சாரத்தை தனியாரிடமிருந்து வாங்காமலோ, மக்களை இருட்டிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியாது.
2006-2011 காலகட்டத்தில் இருந்த திமுக ஆட்சியில், தமிழ் நாடு இருளில் மூழ்கிக் கிடந்தது. தேர்தலில் நாங்கள் தோற்றால் மின்தடையே காரணம் என்று அன்றைய திமுக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியே தெரிவித்திருந்தார்.
திமுக ஆட்சியில் அதிக விலை கொடுத்து மின்சாரம், நிலக்கரி போன்றவைகளை வாங்கியதில் பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று 2010-ஆம் ஆண்டு தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது. பொதுவாக, மத்திய அரசு, மாநில அரசு எதுவாக இருந்தாலும் தணிக்கைத் துறை இதுபோன்ற கருத்துகளைத் தான் தெரிவிக்கும். ஆக, இது முறைகேடு கிடையாது என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com