புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

கர்ப்பிணிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும்: சு. வெங்கடேசன் எம்.பி.

கர்ப்பிணிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பூசி உடனடியாக செலுத்த வேண்டும் என்று சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

News image

சு.வெங்கடேசன் எம்.பி.

Updated On :26 ஜூன் 2021, 4:09 pm

DIN

கர்ப்பிணிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் கரோனா தடுப்பூசி உடனடியாக செலுத்த வேண்டும் என்று சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தடுப்பூசிகளை அனைவருக்கும் செலுத்தி, மூன்றாம் அலை பெருமளவில் மக்களைத் தாக்காமல் இருக்க வேண்டும் என்ற  எண்ணத்துடன் நாடே நகர்ந்துக் கொண்டிருக்க, கர்ப்பிணி பெண்களின் நலன் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் எப்போதுமே தனி கவனம் செலுத்தப்பட வேண்டியவர்கள்.

கர்ப்பிணி பெண்களில் யார் தொற்றுக்கு ஆட்படுவார்கள்?  அல்லது பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள்? என்பதை கணிப்பது கடினம். ஆகையால் அனைத்து கர்ப்பிணி பெண்களும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் நாம்.

இப்போது நம்மிடைய இருக்கும் தடுப்பூசிகள், கர்ப்பிணி பெண்களில் எவ்விதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கான தெளிவான வரையறை இதுவரை நம்மிடம் இல்லாமல் இருந்தது.  இருப்பினும் சமீபத்திய இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) தடுப்பூசிகளைப் பயன்படுத்துவது பாதுக்காப்பானது என அறிவுருத்தியுள்ளது.

வாய்ப்பு இருப்பின் MRNA வகை பிரிவைச்சேர்ந்த  ’ஃபைசர்’ தடுப்பூசிகளை வாங்கி கர்ப்பிணிகளுக்கு கொடுப்பது குறித்து அரசு பரிசீலிக்கலாம். ஃபைசர் தடுப்பூசிகள் கர்ப்பிணி பெண்களில் பாதுகப்பானது என பல ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

ஒவ்வொரு மாதமும் ஒரு லட்சம் கர்ப்பிணிகள் அரசாங்கத்தில் பதிவு செய்கின்றனர். அவர்களை கணக்கெடுத்து அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். கர்ப்ப காலத்தின் நடு மூன்று மாதங்கள் மற்றும் கடைசி மூன்று மாதங்களில் பெரும்பாலான கர்ப்பிணிகள் பாதிக்கப்படுவதை பார்க்க முடிகிறது. எனவே முதல் மூன்று மாதங்களில் அவர்களுக்குத் ஃதடுப்பூசி செலுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கு முயலலாம். முதல் மூன்று மாதங்களைக் கடந்தும் தடுப்பூசி செலுத்தாதவர்களை கண்டறிந்து மருத்துவரின் ஆலோசனைப்படி தடுப்பூசி செலுத்த அறிவுறுத்துவது கட்டாயம். FOGSI மற்றும் FIGO போன்ற அமைப்புகள் கர்ப்பிணிகளில் தடுப்பூசிகள் குறித்து கருத்துக்களையும் வழிகாட்டுதல்களையும் வெளியிட்டிருக்கின்றன.

விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் செப்டம்பர் மாத மத்தியில் மூன்றாம் அலை தாக்கும் என்று எச்சரித்திருக்கும் சூழலில், கர்ப்பிணிகள் மீது அதீத கவனம் செலுத்துவது முக்கியம். கர்ப்பிணியோடு சேர்த்து, கருவிலிருக்கும் சிசுவிற்கும் பாதுகாப்பு அளிப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தியதைப் போல, கர்ப்பிணிகளுக்கும் போர்க்கால அடிப்படையில் உடனடியாக செலுத்த வேண்டும். ஆதலால் உடனடியாக தமிழகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவிட முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிகளை அனுப்பித்தந்திட வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.