சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதிக்குப் பிறகு தான் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் இன்று காலை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த பொன்முடி, தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வருகிறது. அவ்வாறு செய்யக் கூடாது. தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பிறகு தான் மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும்.
மாநில பாடத் திட்டம் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வெளியிடப்படும். எனவே அதன்பிறகு, ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குப் பிறகே கல்லூரி மாணவர் சேர்க்கையைத் தொடங்க வேண்டும். பொறியியல் கல்லூரிகளில் வழக்கமான சேர்க்கை முறையே தொடரும்.
முதல் தலைமுறை மாணவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் சலுகைகள் வழக்கம் போல தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
கரோனா பேரிடர் காலம் என்பதால், கல்லூரி மாணவர் சேர்க்கையில் கால தாமதம் ஏற்படுகிறது. ஓய்வு பெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், நீட் தேர்வை ரத்து செய்யும் சட்டம் இயற்றப்படும். ஏற்கனவே, கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்திருக்கிறோம் என்பதால், நீட் தேர்வையும் ரத்து செய்வோம் என்று பொன்முடி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் 37 மாதிரி சூரிய கிராமங்கள்: திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரம்

சென்னையில் 18,971 போலீஸாா் தபால் வாக்கு

பிலிப்பின்ஸ்: ராணுவத்துடன் மோதலில் 10 பிரிவினைவாதிகள் சுட்டுக் கொலை
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


