ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

கூடுதல் தடுப்பூசிகள்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

News image
Updated On :28 ஜூன் 2021, 8:15 am

DIN

தமிழகத்திற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

கடிதத்தில், தமிழ்நாட்டிற்கான தடுப்பூசி ஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்கள்தொகைக்கு ஏற்றவாறு அவர்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும். 

மாநிலங்களுக்கான தடுப்பூசி ஒதுக்கீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு 75%, தனியார் மருத்துவமனைகளுக்கு 25% என்ற விகிதத்தில் உள்ளது.

தனியார் மருத்துவமனைகளில் ஒரு நாள் தேவையைவிட அதிக தடுப்பூசி விநியோகம் செய்யப்படுகிறது. அதுவே அரசு மருத்துவமனைகளில் ஒருநாள் தேவையைவிட குறைவான தடுப்பூசிகளே இருக்கின்றன. 

எனவே, அரசு மருத்துவமனைகளுக்கான உள் ஒதுக்கீட்டை 90 விழுக்காடாக உயர்த்த வேண்டும். 

அரசு மருத்துவமனைகளுக்கு 90%, தனியார் மருத்துவமனைகளுக்கு 10% என்ற விகிதத்தில் தடுப்பூசி ஒதுக்கீட்டை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.