மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

சங்ககிரி நகரில்  பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தாண்டியது

சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலை ரூ.100.23 காசுகளாக அதிகரித்துள்ளது. 

News image
சங்ககிரி நகரில்  பெட்ரோல் விலை ரூ.100-ஐத் தாண்டியது
Updated On :28 ஜனவரி 2024, 3:31 am

DIN


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலை ரூ.100.23 காசுகளாக அதிகரித்துள்ளது. 

இவ்விலை உயர்வு நடுத்தர மக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது. மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

சங்ககிரி நகர் பகுதியில் நிகழாண்டு ஜூன் 1ம் தேதி பெட்ரோல் விலை ரூ.96.42 ஆக இருந்தது. அதன்பிறகு தொடர்ந்து விலை உயர்வு கண்டு வருகிறது. இன்று 0.31காசுகள் விலை அதிகரித்து பெட்ரோல் விலை ரூ.100.23 காசுகளாக  உயர்ந்துள்ளது.

அதாவது, ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 29ம் தேதி வரை மொத்தம் ரூ.3.81 காசுகள் அதிகரித்து இன்றைய பெட்ரோல் விலை சங்ககிரி நகரில் ரூ.100.23க்கு விற்பனை செய்யப்பட்டது. 

தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரிப்பால்  தனியார் நிறுவன ஊழியர்கள் இரு சக்கர வாகனத்தில்  கூலி வேலைக்கு செல்பவர்கள் பெரிதும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். 

எனவே மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.