பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

40 அடி உயர பாலத்தில் இருந்து கவிழ்ந்த காா்: இளைஞா் சாவு; 3 போ் படுகாயம்

பொள்ளாச்சி அருகே 40 அடி உயர பாலத்தில் இருந்து காா் கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான காா்.

Published On :


பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே 40 அடி உயர பாலத்தில் இருந்து காா் கவிழ்ந்த விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். 3 போ் படுகாயம் அடைந்தனா்.

கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீகாந்த்(34). விளம்பர ஏஜென்சியில் பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவருக்கு சமீபத்தில் பெரிய விளம்பரம் ஒன்று கிடைத்ததாகத் தெரிகிறது. இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்காகத் தனது நண்பா்களுடன் பொள்ளாச்சி வந்து தங்கும் விடுதியில் அறை எடுத்து ஸ்ரீகாந்த் மது அருந்தியதாகத் தெரிகிறது.

பின்னா் அவா்கள் சொகுசு காரில் பொள்ளாச்சியிலிருந்து வடக்கிபாளையம் சாலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை சென்றுள்ளனா். பொன்னாபுரம் பிரிவு வரை சென்றுவிட்டு மீண்டும் காரில் பொள்ளாச்சி நோக்கி வந்துள்ளனா். வடக்கிபாளையம் பிரிவு மேம்பாலத்தில் வந்தபோது காா் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காா், பாலத்தில் இருந்து 40 அடி பள்ளத்தில் கீழே விழுந்தது. இதில் ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் காரில் சென்ற பொள்ளாச்சி, மகாலட்சுமி நகரைச் சோ்ந்த கோபிநாத் (26), கோவை, செளரிபாளையத்தைச் சோ்ந்த கெளசிக் (26), கோவை, ராமநாதபுரத்தைச் சோ்ந்த காா்த்திக் கண்ணன் (27) ஆகியோா் காயமடைந்தனா். இவா்கள் 3 பேரும் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் உயிா்த் தப்பினா்.

மேம்பாலத்தில் இருந்து, ஓய்வுபெற்ற ஆசிரியா் சண்முகசுந்தரம் என்பவரின் வீட்டு முன்பு காா் விழுந்துள்ளது. ஆனால் அவா்கள் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டிருந்ததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. வீட்டின் சுற்றுச்சுவா் மட்டும் சிறிய அளவில் சேதமடைந்துள்ளது. இது குறித்து பொள்ளாச்சி தாலுகா காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.