தொகுதிப் பங்கீடு: ஓபிஎஸ் - இபிஎஸ் ஆலோசனை
பாஜக, தேமுதிக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.


பாஜக, தேமுதிக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும் நிலையில் முதல்வரும், துணை முதல்வரும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டம் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், கே.பி. அன்பழகன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் கே.பி. முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக, அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதே அளவிலான இடங்களை தங்களுக்கும் ஒதுக்க வேண்டும் என தேமுதிக நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், 10 முதல் 15 தொகுதிகள் மட்டுமே தர அதிமுக முன்வந்துள்ளது. இதன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை ஓரிரு நாளில் நடைபெற உள்ளது.
அதேபோல பாஜகவுக்கும் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை ஓரிரு தினங்களில் நடைபெற உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...