புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ராஜேஷ் தாஸ் விவகாரம்: தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம்

காவல்துறை சிறப்பு அதிகாரி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

News image
Updated On :1 மார்ச் 2021, 6:48 am

DIN

காவல்துறை சிறப்பு அதிகாரி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

தமிழக சட்டம் ஒழுங்கு சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் டிஜிபி திரிபாதியிடம் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து, ராஜேஷ்தாஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். 

புகார் குறித்து விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் 6 பேர் கொண்ட விசாரணைக் குழு (விசாகா கமிட்டி) அமைக்கப்பட்டுள்ளது. பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் கூடுதல் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காவல்துறை அதிகாரி ராஜேஷ் தாஸ் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக  தாமாக முன் வந்து வழக்கை விசாரனைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலையா? எனக் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கை பிற்பகல் 2.15 மணியளவில் விசாரித்து உத்தரவு பிறப்பிக்கபடும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.