தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருச்சி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் பலி

திருச்சியில், கொடிக் கம்பம் அருகே மின்சாரம் செல்லும் உயரழுத்த மின் வயரில் சிக்கி ரஷீது அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

News image

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த இளைஞர்

Updated On :2 மார்ச் 2021, 10:18 am

DIN

திருச்சியில், கொடிக் கம்பம் அருகே மின்சாரம் செல்லும் உயரழுத்த மின் வயரில் சிக்கி ரஷீது அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் பகுதியில் தேர்தல் நன்னடத்தை விதிகளைத் தொடர்ந்து கட்சிக் கொடிக் கம்பங்கள் அகற்றும் பணியில் கட்சியினர் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது கடைவீதி பகுதியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிக் கம்பத்தினை அகற்றும் பணியில் கட்சியினர் ஈடுபட்டிருந்தபோது அவர்களுக்கு உதவியாக திமுக பிரமுகர், அதே பகுதியில் கிழக்கு தெருவில் வசித்து வரும் முஸ்தபா மகன் ரஷீதுஅலி(32) என்பவர் உதவி செய்துள்ளார்.

அப்போது குழியிலிருந்து அகற்றிய கொடிக் கம்பம் அருகில் மின்சாரம் செல்லும் உயரழுத்த மின் வயரில் சிக்கியதில் ரஷீது அலி மீது  மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் படுகாயமடைந்த நிலையில் அக்கம்பக்கத்தினரால் புத்தாநத்தம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற ரஷீது அலி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து புத்தாநத்தம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.