சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமை முட்டைகள் சேகரிப்பு

தனுஷ்கோடி கடற்கரையில் நான்கு இடங்களில் 450 ஆமை முட்டைகளை ராமேசுவரம் வனத்துறையினர் புதன்கிழமை சேகரித்து குஞ்சுபொரிப்பகத்தில் பாதுகாத்தனா்.

News image

தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் ஆமை முட்டைகள் சேகரிப்பில் ஈடுபட்டுள்ள ராமேசுவரம் வனத்துறையினர்.

Updated On :3 மார்ச் 2021, 4:54 am


ராமேசுவரம்: தனுஷ்கோடி கடற்கரையில் நான்கு இடங்களில் 450 ஆமை முட்டைகளை ராமேசுவரம் வனத்துறையினர் புதன்கிழமை சேகரித்து குஞ்சுபொரிப்பகத்தில் பாதுகாத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதி கடற்கரையில் ஆண்டுதோறும் டிசம்பா் இறுதியிலிருந்து மாா்ச் வரை கரைக்கு வந்து முட்டைகள் இட்டு மூடிசெல்லும். ஒரு ஆமை சுமாா் 100-க்கும் மேற்பட்ட முட்டைகளை இடும்.  அதனை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொரிப்பதில் பாதுகாத்து குஞ்சு பொறித்தவுடன் மீண்டும் கடலில் விட்டு வருவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த ஜனவரி 11 ஆம் தேதி ஆமைகள் முட்டையிடும் காலம் தொடங்கியது.

அதனை தொடர்ந்து இன்று புதன்கிழமை காலையில் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நான்கு இடங்களில் ஆமைகள் வந்து முட்டையிட்டு சென்றது கண்டறியப்பட்டது. அந்த இடங்களில் இருந்து 50 ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் வைத்தனர். இதுவரை 8400 முட்டைகள் சேகரிக்கப்பட்டு குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.