ஐடிஆர் தாக்கல் செய்ய ஜூலை 31 வரை காத்திருக்கக் கூடாதாம்! ஏன்?திருப்பதியில் வாழ்நாள் முழுவதும் விஐபி தரிசனம்! காவல்நிலையத்தில் புகார்! பின்னணி என்ன?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 16 காசுகள் உயர்ந்து ரூ. 95.66 ஆக நிறைவு!சரிவிலிருந்து மீண்டெழுந்த பங்குச் சந்தை: சென்செக்ஸ் 889 புள்ளிகளுடனும், 24,250 புள்ளிகளை கடந்த நிஃப்டி!மக்களவையில் பேசத் தடுத்ததை இன்று மாலை 6 மணிக்கு செய்தியாளர் சந்திப்பில் பேசுவேன்: ராகுல் காந்திவந்தே மாதரத்தை அவமதிப்பது குற்றம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!கத்திப்பாராவில் 101 அடி உயர மெட்ரோ பாலத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!மக்களவையில் தேர்வு முறைகேடுகள் தடுப்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம்!சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் விஜய் ஆய்வு! துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டது யார்? அமித் ஷா எங்கே? பயந்துவிட்டாரா? மக்களவையில் ராகுல் கேள்வி! மாணவர்கள் போராட்டத்தை பாஜகவினர் குழந்தைகளே ஆதரிப்பார்கள்! ராகுல் காந்தி பேச்சு!மாணவர்கள் மீதான போலீஸ் தடியடி சாதாரணமான ஒன்றுதான்! மாநிலங்களவையில் ஜெ.பி. நட்டா பதில்!பாமக தலைவராக மீண்டும் அன்புமணி தேர்வு! நீட் வினாத்தாள் கசிவு! விரைவு நீதிமன்றத்தில் அவகாசம் கோரிய சிபிஐ! சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு
/

சாணத்தில் இருந்து சமையல் எரிவாயு...

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே நடக்கும் போரால் 'சமையல் வாயு' என்று அழைக்கப்படும் எல்.பி.ஜி. வாயு பற்றாக்குறை பெரும்பாலான நாடுகளின் செலவுகளை அதிகரிக்கச் செய்துள்ளது.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 10:29 pm IST

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் நாடுகளுக்கிடையே நடக்கும் போரால் 'சமையல் வாயு' என்று அழைக்கப்படும் எல்.பி.ஜி. வாயு பற்றாக்குறை பெரும்பாலான நாடுகளின் செலவுகளை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால் பண வீக்கம் அதிகரிப்பதுடன் தொழில் மந்த நிலையும் ஏற்பட்டுள்ளது. தாமதமான சமையல் வாயு விநியோகம் மக்களிடையே பதற்றநிலையையும் ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டில் கிராமப்புற மக்கள் உணவைச் சமைக்கும் முறையை மாற்றி, விறகு அல்லது விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தும் பாரம்பரிய அடுப்புகளுக்குத் திரும்பியுள்ளனர். நகரவாசிகள் மின்சார இணைப்புகள், இண்டக்ஷன் அடுப்புகள், சூரியச் சக்தியில் இயங்கும் சமையல் அடுப்புகள் போன்ற நவீன மாற்று வழிகளுக்கு மாறி வருகின்றனர்.

உத்தரகண்டில் 'சமய சஞ்சீவி' எனப்படும் சாணத்தில் இருந்து தயாரிக்கப்படும் சமையல் எரிவாயுவானது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

ராகேஷ் என்பவர் தனது தம்பியுடன் அதிக அளவில் பசு, எருமை, காளை சாணத்தைச் சேகரித்து சமையல் எரிவாயுவைத் தயாரித்து, அதை சிலிண்டரில் அடைத்து மக்களுக்கு விநியோகிக்கவும் தொடங்கியுள்ளார்.

12 கிலோ எடையுள்ள சிலிண்டரில் 18 கிலோ சாணியிலிருந்து தயாரிக்கப்பட்ட எரிவாயுவை அடைத்து, சிலிண்டர் ஒன்றை ரூ.500-க்கு விற்கின்றனர். புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தினர் இந்த முயற்சிக்கு ஊக்கம் அளித்துள்ளனர்.

நீண்ட காலமாக கிராமப்புறங்களில் சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய மீத்தேன் நிறைந்த எரிவாயுவை உற்பத்தி செய்வதற்காக, மாட்டுச் சாணம் போன்ற கரிமக் கழிவுகளை மட்கச் செய்வது நடந்து வருகிறது. ஆனால், இதரப் பயனாளர்களுக்கு

விநியோகம் செய்வது என்ற அளவுக்கு விரிவாகவில்லை. இந்த முயற்சியானது சாணத்திலிருந்து தயாரிக்கப்படும் உயிர்வாயுவை எல்.பி.ஜி. போன்று மாற்ற வசதியானதாக ஆக்கியுள்ளது.

இதேபோல், குருவாயூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் எப்போதும் 50 யானைகள் இருக்கும். யானைகள் போடும் சாணம் தினமும் சிறிய குன்று போல குவியும். இந்தச் சாணத்திலிருந்து சமையல் எரிவாயுவைத் தயாரித்து கோயிலின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்துகொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.