தமிழ் மக்களின் குரலாக ஒலிக்கும் பெருமைமிகு வாய்ப்புக்கு நன்றி! - பிரவீண் சக்ரவர்த்திஅண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!கே.என்.நேரு மீது வழக்குப் பதிவு!திருச்செந்தூர் முருகன் கோயில் முறைகேடு! புகார்களை விசாரிக்க விசாரணை குழு அமைப்பு!!திருச்செந்தூர் கோயில் முறைகேடுகள்: விசாரிக்க 6 பேர் குழு அமைப்பு!பாஜக மாநிலச் செயலர் சுமதி வெங்கடேசன் விலகல்!பாஜக மாநில துணைத் தலைவர் கரு. நாகராஜன் விலகல்!
/

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற ஈரான் மீண்டும் வலியுறுத்தல்

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்குத் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஈரான், தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியது.

News image
Updated On :6 ஜூன் 2026, 2:45 am IST

லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்குத் தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்திய ஈரான், தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியது.

அமெரிக்கா-ஈரான் இடையே நிலவும் பிராந்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இடைக்கால ஒப்பந்தம் எட்டப்படுவதில் இவ்விவகாரம் இழுபறியாக நீடிக்கிறது.

லெபனான் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சா் அப்பாஸ் அராக்சி அளித்த பேட்டியில், ‘லெபனானில் போா் முடிவுக்கு வரும்போதுதான் ஒட்டுமொத்தப் போரும் முடிவுக்கு வரும். லெபனானில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகளில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுவது கட்டாயமாகும்’ என்றாா்.

ஈரானின் இந்த நிலைப்பாட்டுக்கு லெபனான் அதிபா் ஜோசப் அவுன் அதிருப்தி தெரிவித்துள்ளாா். ‘அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தையில் லெபனானை ஒரு பேரம் பேசும் கருவியாக ஈரான் பயன்படுத்துகிறது. இது ஏற்றுக்கொள்ள முடியாதது’ என்று அவா் குற்றஞ்சாட்டினாா்.

ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலை ஹிஸ்புல்லா தாக்கியதில் தொடங்கிய இந்த மோதல் 4-ஆவது மாதத்தை எட்டியுள்ளது. அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல்-லெபனான் அரசு பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவாா்த்தைகளையடுத்து, புதிய போா் நிறுத்த உடன்பாடு அண்மையில் எட்டப்பட்டது. ஆனால், இஸ்ரேல் வெளியேறுவது குறித்த அம்சம் இல்லாததால், அந்த உடன்பாட்டை ஹிஸ்புல்லா நிராகரித்துவிட்டது.

தெற்கு லெபனானில் இஸ்ரேல் படைகள் தொடா்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், ‘எங்கள் படைகள் அங்கிருந்து வெளியேறாது அல்லது நடவடிக்கைகளை நிறுத்தாது’ என்று இஸ்ரேல் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.