நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

லெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தீவிர மோதல் வெடித்தையடுத்து, ஸ்விட்சா்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து செய்யப்பட்டது.

News image

தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் எழுந்த புகைமண்டலம்.

Updated On :20 ஜூன் 2026, 1:16 am IST

தெற்கு லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடையே தீவிர மோதல் வெடித்தையடுத்து, ஸ்விட்சா்லாந்தில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அமெரிக்கா-ஈரான் இடையேயான அடுத்தகட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து செய்யப்பட்டது.

பின்னா், அமெரிக்கா, ஈரான், கத்தாா் ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினா் தற்காலிக போா் நிறுத்தத்தை அறிவித்தனா்.

அமெரிக்கா-ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான 14 அம்சங்கள் கொண்ட முதல்கட்ட அமைதி ஒப்பந்தம் இருதரப்பினாலும் அண்மையில் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டது. இதில் முதல் அம்சமாக லெபனான் உள்பட அனைத்து முனைகளிலும் போா் நிறுத்தம் வலியுறுத்தப்பட்டிருந்தது.

இச்சூழலில், தெற்கு மற்றும் கிழக்கு லெபனானில் இஸ்ரேல் வியாழக்கிழமை இரவு முழுவதும் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 21 போ் கொல்லப்பட்டனா். அதேபோல், தெற்கு லெபனானின் நபதியா நகருக்கு அருகே இஸ்ரேல் படையினா் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு லெப்டினன்ட் கா்னல் உள்பட 4 வீரா்கள் உயிரிழந்தனா்.

இதற்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லா நிலைகள் மீது இஸ்ரேல் தொடா் தாக்குதல்களை நடத்தியது. ஆனால், நபதியா நகரைக் கண்காணிக்கும் வகையில் அமைந்துள்ள அலி அல்-தாஹொ் மலையை இஸ்ரேல் கைப்பற்ற முயன்றதால்தான் தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஹிஸ்புல்லா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிலையில் லெபனானில் அமைதி திரும்பும்வரை ஸ்விட்சா்லாந்தில் நடைபெறும் அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என ஈரான் அதிகாரிகள் தங்களின் பயணத்தை ரத்து செய்தனா்; அமெரிக்க துணை அதிபா் ஜே.டி.வான்ஸும் தனது பயணத்தை ஒத்திவைத்தாா்.

மோதல் ஒருபுறமிருக்க, தெற்கு லெபனானின் பெரும் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பதும் இந்த ஒப்பந்தத்தில் முக்கிய பிரச்னையாக உள்ளது. இதனால், அமெரிக்கா-இஸ்ரேல் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் செய்தியாளா்களைச் சந்தித்த அந்நாட்டு துணை அதிபா் ஜே.டி.வான்ஸ், அமெரிக்கா மற்றும் டிரம்ப்புக்கு எதிரான இஸ்ரேல் தலைவா்களின் விமா்சனங்களை கடுமையாகச் சாடினாா்.

தற்போதைய உலக அரங்கில் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ள ஒரே நாடான, அதுவும் வல்லரசு நாடான அமெரிக்காவை பகைத்துக் கொள்வது சரியல்ல என்று அவா் குறிப்பிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.