தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
வேளச்சேரியில் ராதிகா சரத்குமார் போட்டி
Updated On :3 மார்ச் 2021, 7:10 am

DIN


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணியிலிருந்து விலகிய சமத்துவ மக்கள் கட்சி, சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திய ஜனநாயகக் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடப் போவதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலையும் சரத்குமார் கடந்த வாரம் சந்தித்துப் பேசினார். கூட்டணி குறித்து இறுதி முடிவை கமல் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் இன்று நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் பேசிய துணைப் பொதுச் செயலாளர் விவேகானந்தன், சென்னை வேளச்சேரி தொகுதியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

வேளச்சேரி தொகுதியில் திமுகவைச் சேர்ந்த  வாகை சந்திரசேகர் தற்போது எம்எல்ஏ-வாக உள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.