திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

தொகுதி பங்கீடு நாளை இறுதி செய்யப்படும்: முத்தரசன்

சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து நாளை (மார்ச் 5) இறுதி செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

News image
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்
Updated On :4 மார்ச் 2021, 12:15 pm

DIN

சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து நாளை (மார்ச் 5) இறுதி செய்யப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதிப் பங்கீடு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கு  முத்தரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து நாளை இறுதி செய்யப்படும் என்று கூறினார்.

ஏற்கெனவே நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் சிபிஐக்கு 6 தொகுதிகள் வரையே ஒதுக்க முடியும் என திமுக தரப்பில் கூறப்பட்டது. ஆனால், சிபிஐ இரட்டை இலக்கு எண்ணில் தொகுதிகள் கோரியிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.