தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தொகுதிப் பங்கீடு இழுபறி: நிர்வாகிகளுடன் காங். ஆலோசனை

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதால் செயற்குழு உறுப்பினர்களுடன் காங்கிரஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

News image
Updated On :5 மார்ச் 2021, 6:06 am

DIN


சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருவதால் செயற்குழு உறுப்பினர்களுடன் காங்கிரஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றுவரும் இந்த ஆலோசனையில் தினேஷ் குண்டுராவ், வீரப்பமொய்லி, கே.எஸ். அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சட்டப்பேரவைத் தோ்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்காக திமுக - காங்கிரஸ் இடையே இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை டைபெற்று உள்ளது.

காங்கிரஸ் தரப்பில் 41 தொகுதிகள் கேட்கப்பட, திமுக 22 தொகுதிகள் தர முன் வந்துள்ளது. பின்னர் மீண்டும் நடைபெற்ற 2ம் கட்டப் பேச்சில் 22 முதல் 24 தொகுதிகள் வரை காங்கிரஸுக்கு ஒதுக்குவதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தொகுதிப் பங்கீட்டுல் இழுபறி நீடித்து வருவதால், செயற்குழு உறுப்பினர்களுடன் காங்கிரஸ் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.