ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் இன்று முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். 

News image
கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
Updated On :9 மார்ச் 2021, 9:33 am

DIN

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையில் இன்று முதல் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். 

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. 

Story image

மார்ச் 1 முதல் நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோா், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. 

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

இதுகுறித்து அவர் சுட்டுரைப் பக்கத்தில், 

Story image

"கரோனா முதல் தடுப்பூசியை இன்று செலுத்திக்கொண்டேன். 

குறுகிய காலத்தில் சளைக்கா முயற்சிகளால் நமக்கு வெற்றிகரமாகத் தடுப்பூசியைக் கொடுத்த அறிவியல் சமுதாயத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. தொடர்ந்து நலத்தோடும் பாதுகாப்போடும் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் அனைவரும் மேற்கொள்வோம்" என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.