நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

திமுக தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

News image

திமுக கூட்டணியில் பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

Updated On :10 மார்ச் 2021, 9:23 am

DIN

திமுக தலைமையிலான கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர் கதிரவன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

திமுக கூட்டணியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இக்கட்சிக்கு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்வர்டு பிளாக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டால் திமுக போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 173 ஆக இருக்கும். 

திமுக, கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை:

திமுக 174
காங்கிரஸ் 25
மாா்க்சிஸ்ட் 6
இந்திய கம்யூனிஸ்ட் 6
மதிமுக 6
விசிக 6
முஸ்லிம் லீக் 3
கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 3
மனிதநேய மக்கள் கட்சி 2
தமிழக வாழ்வுரிமை கட்சி 1
ஆதி தமிழா் பேரவை 1
மக்கள் விடுதலை கட்சி 1
பார்வர்டு பிளாக் கட்சி 1.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.