த.மா.கா. போட்டியிடும் 6 தொகுதிப் பட்டியல் வெளியீடு
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.


அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்டி திரு.வி.க.நகர், பட்டுக்கோட்டை, ஈரோடு கிழக்கு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதிமுக கூட்டணியில் த.மா.கா. இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறது.
6 தொகுதிகளில் போட்டியிடும் த.மா.கா. வேட்பாளர் பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்றும் தமாகவின் சைக்கிள் சின்னம் தொடர்பாக வழக்கு நிலுவையிலுள்ளதால் அதிமுக சின்னத்தில் போட்டி என்றும் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
லால்குடிக்கு அதிமுக வேட்பாளராக ராஜராம் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த தொகுதி த.மா.கா.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...