சங்ககிரி: வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்தடைந்தன
சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வியாழக்கிழமை சங்ககிரி வந்தடைந்தது.


சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி சட்டப்பேரவை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து வியாழக்கிழமை சங்ககிரி வந்தடைந்தது.
சங்ககிரி வந்த இயந்திரங்களை தேர்தல் அலுவலர்கள் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு அறையில் வைத்து அரசியல் கட்சி நிர்வாகிளின் முன்னிலையில் மூடி முத்திரையிட்டனர்.
சங்ககிரி சட்டப்பேரவை தொகுதியில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் 389 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேலம் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து 10 இயந்திரங்கள் கொண்ட 47 பெட்டிகளில் மொத்தம் 467 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
ஆட்சியரகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட இயந்திரங்களை சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி தேர்தல் அலுவலர் கோ.வேடியப்பன் தலைமையில் உதவி அலுவலர் எஸ்.விஜி, தேர்தல் துணை வட்டாட்சியர் பி.சிவராஜ், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ராஜேந்திரன், மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார் ஆகியோர் சங்ககிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் அரசியல் கட்சி நிர்வாகிகளின் முன்னிலையில் வைத்து அறையை மூடி முத்திரையிட்டனர்.
செவ்வாய்க்கிழமை 467 வாக்குபதிவு இயந்திரகட்டுப்பாட்டு கருவிகளும், புதன்கிழமை வாக்காளர்கள் யாருக்கு வாக்கு அளித்தோம் என்பதை உறுதி செய்யும் 522 கருவிகளும் (விவிபேட்) வந்தடைந்தன.
அவை அனைத்தும் பாதுகாப்பு அறையில் வைத்து மூடி முத்திரையிடப்பட்டு துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அறைகளை சுற்றிலும் 8 கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் வருவாய்த்துறை அலுவலர்கள் சுழற்சி அடிப்படையில் கண்காணித்து வருகின்றனர்.
சங்ககிரி சட்டப்பேரவை தொகுதி தேர்தலுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து தொகுதிக்கான தேர்தல் பணிகளில் வருவாய்துறை அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...