ஆத்தூர்: திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி
ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராகப் போட்டியிட ஐ.பெரியசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


ஆத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியின் திமுக வேட்பாளராகப் போட்டியிட ஐ.பெரியசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெயர்: ஐ.பெரியசாமி
வயது: 06.01.1953
கல்வித்தகுதி: பிஏ.,பிஜிஎல்.,
சாதி: ஈச நாட்டுக் கள்ளர்
பூர்வீகம்: வத்தலகுண்டு
வசிப்பது: திண்டுக்கல்
அரசியல் அனுபவம்: திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக செயலராக பதவி வகித்துள்ளார். மண்டல பொறுப்பாளர் (திண்டுக்கல், தேனி), உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்துள்லார். தற்போது மாநில துணைப் பொதுச் செயலராக உள்ளார்.
வகித்த பதவிகள்: வத்தலகுண்டு ஒன்றியத் தலைவர், 1989, 1996, 2006, 2011, 2016 என 5 முறை ஆத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர், தமிழக ஊரக தொழில், பத்திரப்பதிவு மற்றும் தொழில்துறை அமைச்சராகவும்(1996-2001), வருவாய்த்துறை, சட்டம், வீட்டு வசதி மற்றும் சிறைத் துறை அமைச்சராகவும்(2006-11) பணியாற்றியுள்ளார். ஆத்தூர் தொகுதியில் 8ஆவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். 1991 மற்றும் 2001 தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
குடும்பம்: மனைவி - சுசீலா, மகன்கள் செந்தில்குமார், பிரபு, மகள் இந்திராணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...