பாஜக, அதிமுகவுக்கு உதவத்தான் இந்த போராட்டமா? காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி
பாஜக, அதிமுகவுக்கு உதவத்தான் இந்த போராட்டமா? என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.


பாஜக, அதிமுகவுக்கு உதவத்தான் இந்த போராட்டமா? என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்சியில் இருந்து விலகி மீண்டும் இணைந்தவர்களுக்கு தேர்தலில் வாய்ப்பு தரக் கூடாது என விஷ்ணுபிரசாத் எம்பி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை முதலே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் கே.எஸ்.அழகிரிக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் மற்றொரு தரப்பினரும் சென்னை சத்தியமூர்த்தி பவனில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே விஜயதரணிக்கு சீட் தரக்கூடாது எனக் கூறி காங்கிரஸ் அலுவலகத்தில் மேலும் ஒரு தரப்பினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை சத்தியமூர்த்தி பவனில் அடுத்தடுத்து அரங்கேறி வரும் இந்த போராட்டத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. இதன்மூலம் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு தொடர்பாக அக்கட்சித் தலைவர்களிடையே கருத்து மோதல் நிலவி வருவதும் வெளிப்படையாகத் தெரிகிறது.
இதுகுறித்து விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது சுட்டுரையில், தன் தந்தையால் எம்.எல்.ஏ. இப்ப எம்.பி. வாங்கியவர்கள் இப்ப மகன்களுக்கு கூடாது என தொண்டர்களை ஏமாற்றலாமா? அல்லது பாஜக+ அதிமுக வை உதவ இந்த குழப்பமா? நான் உட்கட்சி விவகாரத்தை பொது வழியில் இந்த நாள்வரை பேசியதில்லை ஆனால் இன்று நாடாகங்களின் சீன் அதிகமாக இருப்பதால் உண்மையின் சில துளிகள்.
கட்சிக்காக உழைத்த முன்னாள் மாவட்டத்தலைவருக்கு அதுவும் சில நூறு ஓட்டில் தோல்வியடைந்தவருக்கு மீண்டும் வந்த தொகுதியை வாங்கக்கூடாது என சண்டை போட்டு வரவிடமால் தடுத்தவர்கள் இன்று நியாயம் பேசலாமா?
சோனியாகாந்தி தலைமையில் நடக்கும் மத்திய தேர்தல் குழு வில் எடுக்கும் முடிவு ஒவ்வொரு உண்மையான காங்கிரஸ் தொண்டனுக்கும் நியாமான முடிவாகக்கிடைக்கும் ஆனால் சிலர் விளம்பரதிற்காக காங்கிரஸ் இயக்கத்திற்கு மிக பெரிய இழிவை ஏற்படுத்தி எதிரிகளுக்கு உதவும் துரோகிகளை கண்டுகொள்ளுங்கள். எனப் பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராக விஷ்ணுபிரசாத் போராட்டம் செய்து வரும் நிலையில் விருதுநகர் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...