ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கோடியக்கரைக்கு அப்பால் தமிழக மீனவர்களை தாக்கி விரட்டியடித்த இலங்கை மீனவர்கள்; 3 பேர் காயம்

கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெள்ளப் பள்ளம் மீனவர்கள் 3 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை மீனவர்கள், உடைமைகளை பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளனர்.

News image
கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்தபோது தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வெள்ளப் பள்ளம் கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள்
Updated On :17 மார்ச் 2021, 10:38 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், கோடியக்கரைக்கு அப்பால் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெள்ளப் பள்ளம் மீனவர்கள் 3 பேர் மீது தாக்குதல் நடத்திய இலங்கை மீனவர்கள், உடைமைகளை பறித்துக் கொண்டு விரட்டியடித்துள்ளனர். காயமடைந்த மூவரும் கரை திரும்பிய நிலையில், நாகை அரசு மகத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்தபோது தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வெள்ளப் பள்ளம் கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள்

கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்தபோது தாக்கப்பட்டு காயமடைந்த நிலையில் வெள்ளப் பள்ளம் கடற்கரைக்கு திரும்பிய மீனவர்கள்

வேதாரண்யத்தை அடுத்த வெள்ளப்பள்ளம் மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நாகமுத்து(36), இவரது சகோதரர்  மூர்த்தி (36), அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (30)  ஆகிய 3 பேரும் மீனவர்கள் மார்ச் 15 ஆம் தேதி வெள்ளப்பள்ளத்தில் இருந்து ஒரு கண்ணாடியிழைப் படகில் சென்றனர்.

Story image

கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடல் பரப்பில் வலை விரித்த இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். செவ்வாய்க்கிழமை இரவு அந்த பரப்புக்கு  ஒரு படகில் வந்த இலங்கை மீனவர்கள் என கருதப்படும் 3 நபர்கள், அரிவாள், வாள் போன்றவைகளை காட்டி ,மீனவர்களை மிரட்டி தாக்கி விரட்டியடித்துள்ளனர். பாய்மர உதவிேயாடு கரை திரும்பிய மீனவர்கள்  3 பேரும் நாகை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடலோரக் காவல் குழும போலீஸார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.