டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஏற்காடு (பழங்குடி தனி) தொகுதி தேமுதிக  வேட்பாளர் வேட்புமனு

சேலம் மாவட்டம் ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதி, தேமுதிக வேட்பாளர் கே.சி.குமார், வாழப்பாடியில் , இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

News image
வாழப்பாடியில் வேட்புமனு தாக்கல் செய்த தேமுதிக வேட்பாளர் கே.சி.குமார்.
Updated On :27 ஜனவரி 2024, 7:47 pm

DIN

வாழப்பாடி: சேலம் மாவட்டம் ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதி, தேமுதிக வேட்பாளர் கே.சி.குமார், வாழப்பாடியில் , இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

 ஏற்காடு (பழங்குடி) தனி தொகுதியில், அமமுக கூட்டணியில் தேமுதிக சார்பில்  பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம் சின்னகல்வராயன் மலை வடக்கு நாடு  ஊராட்சி கருமந்துறை  கிராமத்தைச் சேர்ந்த கே.சி.குமார்(41) வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இவர் வியாழக்கிழமை வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், ஏற்காடு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரான சேலம் தனித்துணை ஆட்சியர் (முத்திரை) பி.கே. கோவிந்தனிடம் பிற்பகல் 2.00 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார். 

தேமுதிக மாற்று வேட்பாளராக கருமந்துறை கிராமத்தைச் சேர்ந்த சிவலிங்கம்(35) வேட்புமனு தாக்கல் செய்தார். தேமுதிக சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், அமமுக சேலம் மாவட்ட அவைத்தலைவர் சண்முகம், வழக்கறிஞர் சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.