ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

நாமக்கல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெ. ராமலிங்கம் வெள்ளிக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

News image
நாமக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர் பெ.ராமலிங்கம்.
Updated On :19 மார்ச் 2021, 9:34 am

DIN

நாமக்கல் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெ. ராமலிங்கம் வெள்ளிக்கிழமை தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

நாமக்கல்-சேலம் சாலையில் தேர்தல் அலுவலகம் திறக்கப்பட்டு வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளரை ஆதரித்து அதன் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வாழ்த்திப் பேசினர். தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக பேருந்து நிலையம் வழியாக நாமக்கல் கோட்டாட்சியர் அலுவலகம் வந்த வேட்பாளர் ராமலிங்கம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கே.ஆர். என். ராஜேஷ்குமார், நகரப் பொறுப்பாளர் ராணா ஆர்.ஆனந்த் ஆகியோர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மு. கோட்டைக் குமாரிடம் வேட்புமனுவை வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.