தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

வெங்கல் அருகே ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம் 

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகில் ஏரியில் மண் அள்ள வந்தவர்களைப் பொதுமக்கள் விரட்டியடித்தனர். 

News image

வெங்கல் அருகே ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு: கிராம மக்கள் முற்றுகை போராட்டம் 

Updated On :19 மார்ச் 2021, 11:16 am

DIN


திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகில் ஏரியில் மண் அள்ள வந்தவர்களைப் பொதுமக்கள் விரட்டியடித்தனர். 

புன்னப்பாக்கம் ஏரியில் சவுடு மண் குவாரி என தனிநபர் பொக்லைன் இயந்திரங்களுடன் இன்று காலை மண் அள்ள வந்துள்ளார். 

Story image

இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் அங்குத் திரண்டு நீர் ஆதாரமாக விளங்கும் ஏரியில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்தனர். குவாரி செயல்பட அனுமதியுள்ளதா, யார் அனுமதி வழங்கியது என மண் அள்ள வந்தவர்களிடம் கேள்வி எழுப்பினர். 

தொடர்ந்து தங்களது கிராமத்தில் மண் அள்ள எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் இயந்திரங்களை கிராம மக்கள் விரட்டியடித்தனர். ஏரியில் சவுடு மண் குவாரிக்கு அரசு வழங்கியுள்ளதா என்பது குறித்து வருவாய்த்துறை மற்றும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.