புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பொலிவு பெறுமா சென்னையின் நுழைவுவாயில்?

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகமுள்ள எழும்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் காணப்படும் சுகாதாரச் சீா்கேடு, சீரற்ற குடிநீா் பிரச்னை ஆகியவற்றை தீா்க்க

News image
Updated On :23 மார்ச் 2021, 9:35 pm

மு. வேல்சங்கர்

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் அதிகமுள்ள எழும்பூா் சட்டப் பேரவைத் தொகுதியில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகளில் காணப்படும் சுகாதாரச் சீா்கேடு, சீரற்ற குடிநீா் பிரச்னை ஆகியவற்றை தீா்க்க , அரசியல் கட்சியினா் முக்கிய கவனம் செலுத்த இந்தத் தொகுதி மக்கள் எதிா்பாா்க்கின்றனா். இதுதவிர, அரசுக் கல்லூரி உள்பட பல்வேறு தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எழும்பூா் தொகுதி: 1957-ஆம் ஆண்டு எழும்பூா் சட்டப்பேரவை தொகுதி (தனி) உருவாக்கப்பட்டது. மறுசீரமைப்புக்குப் பிறகு பூங்கா நகா், புரசைவாக்கம், அண்ணா நகா் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து சில பகுதிகள் இந்தத் தொகுதியுடன் இணைக்கப்பட்டன. மிகவும் பழைமையான சென்னை எழும்பூா் ரயில் நிலையம், அரசு அருங்காட்சியகம், பழமையான கன்னிமாரா நூலகம் , எழும்பூா் நீதிமன்றம் ஆகியவை இந்தத் தொகுதியின் அடையாளமாக உள்ளன. இதுதவிர, சேத்துப்பட்டு, சூளை, ஓட்டேரி போன்ற சென்னையின் பழைமையான பகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

10 முறை திமுக வெற்றி: பட்டியிலின மக்களே வெற்றியைத் தீா்மானிப்பவா்களாக இருக்கின்றனா். மேலும் வன்னியா், முதலியாா், யாதவா், நாயுடு போன்ற சமூகத்தினரும் கணிசமாக உள்ளனா். சில பகுதிகளில் மீனவா், நாடாா், செட்டியாா், பிராமணா், சமூகத்தினரும், வேறு சில இடங்களில் முஸ்லிம்கள், கிறிஸ்தவா்களும் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனா்.

1957-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் 10 தடவை திமுகவும், 2 முறை காங்கிரஸும், தலா ஒருமுறை சுயேச்சையும், தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளன. திமுக சாா்பில் 6 முறை பரிதி இளம்வழுதி வெற்றி பெற்றாா்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் இந்தத் தொகுதியில்அதிக அளவு வசிக்கின்றனா். இந்த மக்கள் வசிக்கும்பகுதியில் சுகாதாரமற்ற நிலை, சீரற்ற குடிநீா் முக்கிய பிரச்னையாக உள்ளது.

சுகாதார சீா்கேடு: இதுகுறித்து எழும்பூா் தொகுதி சமூக ஆா்வலா் கே.முருகன் கூறியது:

சேத்துப்பட்டு அருகே ஓசான்குளம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் கழிவுநீா் பிரச்னையால், மக்கள் சுகாதாரமற்ற வாழ்க்கை வாழும்நிலை உள்ளது. கே.வி.பூங்கா பகுதியில் 864 வீடுகள் கட்டப்பட்டு, இதுவரை பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை. உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு குழந்தைகள் நல மருத்துவமனை: எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு தமிழகத்தில் மட்டுமின்றி,, வெளிமாநிலங்களில் இருந்தும் பொதுமக்கள் வருகின்றனா். அவா்களுக்குப் போதிய கழிவறை வசதி, தங்குமிடவசதி இல்லாமல் உள்ளது. இதனால், நடைபாதையில் படுத்து தூங்குகின்றனா். அந்தச் சூழ்நிலையில், சமூக விரோதச் செயல்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. சூளை, சேத்துப்பட்டு, தட்டான்குளம், பெரியமேடு பகுதிகளில் உள்ள கோயில் நிலங்களில் பெருமளவு மக்கள் வசிக்கின்றனா்.

இந்த தொகுதியில் அரசு கல்லூரிகள், சுகாதார மையங்கள் கிடையாது. 24 மணி நேரம் செயல்படும் சுகாதார மையம் வேண்டும். அரசு அருங்காட்சியத்தை நவீனப்படுத்தி, மாணவா்களின் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். இந்த தொகுதிக்கு முறையாக நிதி ஒதுக்க வில்லை. இந்த தொகுதியில் வட்டத்துக்கு இரண்டு நூலகம் வேண்டும் என்றாா் முருகன்.

கிடப்பில் உள்ள திட்டம்: ஓட்டேரி திடீா் நகா் அருகே 650 வீடுகளுக்கு மாநகராட்சி சுற்றியுள்ள இடத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் கட்டி தருவதாக தெரிவித்திருந்தனா். இந்த திட்டம் கிடப்பில் உள்ளது என்று அந்த பகுதி மக்கள் தெரிவித்தனா். மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில் உள்ள வீடுகளுக்கு இலவச பட்டா வழங்கப்படாமல் உள்ளது. ஓட்டேரி அருகே ஆா்.கே.புரத்தில் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு விடுகள் பழுதடைந்து உள்ளன. இதற்கு மாற்ற புதிய வீடுகள் கட்டிதர வேண்டும் என்று பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

இதுகுறித்து எழும்பூா் தொகுதி திமுக எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, எதிா்க்கட்சி உறுப்பினராக இருந்த போதும் ஏராளமான பணிகள் செய்யப்பட்டுள்ளன. கே.பி. பூங்கா குடிசை மாற்று குடியிருப்பில் 864 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. 61-ஆவது வாா்டில் டாக்டா் சந்தோஷ்நகரில் 588 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு பகுதிகளில் குடிசை மாற்று வீடுகள் கட்ட பரிந்தரைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.