தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

முசிறி எம்.எல்.ஏ. காரில் ரூ.1 கோடி பறிமுதல்

திருச்சி பெட்டவாய்த்தலையில் முசிறி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜி காரில் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

News image
முசிறி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜி காரிலிருந்து கைப்பற்றப்பட்ட பணம்
Updated On :24 மார்ச் 2021, 6:21 am

DIN

திருச்சி பேட்டவாய்த்தலையில் முசிறி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜி காரில் கொண்டுவரப்பட்ட ஒரு கோடி ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பேட்டவாய்த்தலை சோதனை சாவடியில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்தவழியாக அதிமுக கொடி பொருத்தப்பட்டிருந்த காரை அதிகாரிகள் மடக்கி சோதனையில் ஈடுபட்டனர். அதில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட கட்டுக்கட்டான பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஸ்ரீரங்கம் தோ்தல் நடத்தும் அலுவலா் நிஷாந்த் கிருஷ்ணா, ஜீயபுரம் ஏடிஎஸ்பி செந்தில்குமாா் கொண்ட குழுவினா் ஸ்ரீரங்கம் வட்டாட்சியரகத்துக்கு அவா்களை அழைத்து வந்து பணத்தைக் கணக்கிட்டனா். இதில் சுமார் 1 கோடி ரூபாய் இருந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக காரில் வந்த முசிறியை சேர்ந்த ஜெயசீலன், சிவக்குமார் உள்பட 4 பேரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

பறிமுதல் செய்யப்பட்ட பணம், கார் ஆகியவை முசிறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் செல்வராஜி-க்கு சொந்தமானது என்றும், அவரது அறிவுறுத்தலின்பேரில் பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.