பிரதமருக்கு கருப்பு கொடி காட்ட முயற்சி: பெரியார் அமைப்பினர் கைது
தமிழகம் மற்றும் கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.


தமிழகம் மற்றும் கேரளாவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு புறப்பட்டுச் சென்றார்.
பாலக்காட்டில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு மீண்டும் தாராபுரம் வந்து வாக்கு சேகரிக்கிறார். இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் பிரதமர் வருகையைக் கண்டித்து இன்று பீளமேடு பகுதியில் ‘கோ-பேக்’ மோடி என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து, அவினாசி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனை தொடர்ந்து த.பெ.தி.கவினர் 30க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து வேனில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் பீளமேடு பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...