மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

தமிழகத்தில் புதிதாக 2,342 பேருக்கு கரோனா; சென்னையில் 874 பேர் பாதிப்பு

தமிழகத்தில் புதிதாக 2,342 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :30 மார்ச் 2021, 1:13 pm

DIN


தமிழகத்தில் புதிதாக 2,342 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக இன்றையசெவ்வாய்க்கிழமை) கரோனா பாதிப்பு நிலவரத்தை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிதாக 2,342 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 10 பேர் வெளிநாடு, வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

சென்னையில் மட்டும் இன்று 874 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 8,84,094 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 16 பேர் உள்பட இதுவரை 12,700 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,463 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 8,56,548 பேர் குணமடைந்துள்ளனர்.

இன்றைய நிலவரப்படி 14,846 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

கடந்த ஆண்டு இதே நாளில் (மார்ச் 30, 2020) தமிழகத்தில் 67 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.