டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ரயில் நிலையத்தில், புலம்பெயர் தொழிலாளர் உதவி மையம் தொடக்கம் 

ஈரோடு ரயில் நிலையத்தில் ஈரோடு உரிமைக்கல்விக்கான மேம்பாட்டு மையம்-ரீடு தொண்டு நிறுவனம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் புலம்பெயர் தொழிலாளர் உதவி மையத்தை தொடங்கியுள்ளது.  

News image
ஈரோடு ரயில் நிலையத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ள புலம்பெயர் தொழிலாளர் உதவி மையம்.
Updated On :1 மே 2021, 9:22 am

DIN


ஈரோடு ரயில் நிலையத்தில் ஈரோடு உரிமைக்கல்விக்கான மேம்பாட்டு மையம்-ரீடு தொண்டு நிறுவனம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் புலம்பெயர் தொழிலாளர் உதவி மையத்தை தொடங்கியுள்ளது.  

ஈரோடு மாவட்டத்தில் ஏறத்தாழ 1.25 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பெருந்துறை சிப்காட் போன்ற பகுதிகளில் தங்கி பல்வேறு ஸ்பின்னிங் மில், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் வேலை செய்து வருகிறார்கள். கடந்த ஆண்டு, பொது முடக்கத்தினால், இத்தொழிலாளர்கள் திரளாக தங்களது சொந்த மாநிலங்களுக்கு பிரயாணம் செய்தார்கள். அநேக தொழிலாளர்கள் கால்நடையாக பவ்வேறு இடங்களுக்கு சென்றார்கள். அப்போதைய பொது முடக்கத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகினார்கள்.  

இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் தற்போதைய சூழலில்,  பொது முடக்கம் மற்றும் நோய்தொற்று அச்சத்தினால் கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். 

இதற்காக ஈரோடு ரயில் நிலையத்தில் ஒரே நாளில் சராசரியாக 500 தொழிலாளர்கள் வருவதும், செல்வதும், ரயிலுக்காக அடுத்த நாள்வரை இங்கேயே தங்கியிப்பது வாடிக்கையாகி வருக்கிறது.   

இச்சூழலில், ஈரோடு உரிமைக்கல்விக்கான மேம்பாட்டு மையம்-ரீடு தொண்டு நிறுவனம், ஈரோடு ரயில் நிலையத்தில், புலம்பெயர் தொழிலாளர் உதவி மையத்தை தொடங்கியுள்ளது.  

தற்போது முன்பதிவு இல்லாமல் ரயில் பிரயாணம் செய்யமுடியாத காரணத்தால், ஹிந்தி மொழியில் பேச, படிக்க, எழுத தெரிந்த 3 தன்னார்வலர்கள் இந்த மையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் தொழிலாளர்களுக்கு, முன்பதிவு படிவம் பூர்த்தி செய்து கொடுத்தல், ரயில் வரும், புறப்படும் நேரம் போன்ற தகவலை கொடுத்து உதவுகிறார்கள். 

மேலும், சமூக இடைவெளி, முக கவசத்தின் அவசியம், தொற்று அறிகுறி போன்ற தகவல் குறித்து விழிப்புணர்வுகளை வழங்குகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.