தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விளவங்கோட்டில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தார் விஜயதரணி!

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி 71,764 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

News image
Updated On :2 மே 2021, 1:42 pm

DIN

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி 71,764 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். 

விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் விஜயதரணி  71,764 வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளார். 

இவர் அதிமுக கூட்டணியில் போட்டியிட பாஜக வேட்பாளர் ஜெயசீலனை தோற்கடித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதரணிக்கு சீட் கொடுக்கக்கூடாது என காங்கிரசின் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விஜயதரணி பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளிவந்தன. ஆனால், விஜயதரணி இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, விளவங்கோடு தொகுதியில் போட்டியிட விஜயதரணிக்கு காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. சர்ச்சைகளை கடந்து விஜயதரணி வெற்றியை தக்கவைத்துள்ளார். 

விளவங்கோடு தொகுதியில் இருந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜயதரணி எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.